HIGHLIGHTS


ஜிப்மர் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவரே காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை பணியாளரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றது... மருத்துவர் ஒருவரே இதுபோன்று சமூக பொறுப்பின்றி நடந்துகொள்வது சரியா என கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள் ...

Senthil Kumar 2020-06-01 21:44:15    VIDEO 10893




ஜிப்மர் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவரே காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை பணியாளரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றது... மருத்துவர் ஒருவரே இதுபோன்று சமூக பொறுப்பின்றி  நடந்துகொள்வது சரியா என கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள் ...
புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலை அருகே நேற்று இரவு போலீசார் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் வாகன சோதனை மேற்கொண்டு வந்தனர்.அப்போது PY 05 D 6061 என்கிற காரை நிறுத்திய போலீசார் அதில் இருந்தவர்கள் முக கவசம் அணியாமல் வந்ததை அறிந்து அவர்களை அபராதம் கட்ட சொல்லியுள்ளனர்.

அப்போது அதிலிருந்த thaanek (தானேக்) என்பவர் நான் தினந்தோறும் ரிஸ்க் எடுத்து கொரோனா பணி செய்கிறேன் , கொரோனா நோயாளிகளை பார்க்கின்றேன். எனக்கு என்னை பார்க்க தெரியும் எனது குடும்பத்தையும் பார்க்க தெரியும் நான் thaanek (தானேக்) ஜிப்மர் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் என்றும் கூறி தற்போது அபராதம்கட்டவேண்டுமா கட்டுகின்றேன் என்று வாக்குவாதம் செய்கின்றார். மேலும் நான் கார் ஒட்டவில்லை என்று வாக்குவாதம் செய்கின்றார். தொடர்ந்து அவரை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைக்கின்றனர்.

இந்நிலையில் சிறிது நேரத்தில் அவரே காரை எடுத்துக்கொண்டு வேகமாக செல்கின்றார். இவர் தன்னை மருத்துவர் என்று கூறும் ஒருவர் இதுபோன்று பொது இடங்களில் விதிகளை மீறலாமா என்றும் அபராதம் தானே நான் காட்டுகின்றேன் என்று காவல்துறை மற்றும் சுகாதர ஊழியர்களின் பேசுவது தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஜிப்மர் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவரே இதுபோன்று பொதுஇடத்தில் தவறாக நடத்துக்கொள்வது சரியா என்றும் அவர் மதுபானம் அருந்தி இருப்பதால் இதுபோன்று நடந்து கொள்கின்றாரா என வீடியோவை பார்ப்பவர்கள் கேள்வி எழுப்புகின்றனர் .








Related News

video

புதுச்சேரி அரசின் பொதுப்பணித் துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் சுமார் 1300 ஊழியர்களுக்கு பணிநிரந்தரம் அல்லது சம்பள உயர்வு வழங்க வலியுறுத்தி ஊழியர் சங்க செயலாளர் திரு சரவணன் மற்றம் நிர்வாகிகள் அஇஅதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் அவர்களோடு மாண்புமிகு முதல்வரை சந்தித்து மனு கொடுத்தனர்.
Senthil Kumar 2020-07-15 23:34:59
புதுச்சேரி அரசின் பொதுப்பணித் துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் சுமார் 1300 ஊழியர்களுக்கு பணிநிரந்தரம் அல்லது சம்பள உயர்வு வழங்க வலியுறுத்தி ஊழியர் சங்க செயலாளர் திரு சரவணன் மற்றம் நிர்வாகிகள் அஇஅதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் அவர்களோடு மாண்புமிகு முதல்வரை சந்தித்து மனு கொடுத்தனர்.அப்போது முதல்வரிடம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் அவர்கள் கூறும்போது :
புதுச்சேரியில் இன்று முதல்வர் நாராயணசாமி அவர்கள் பேட்டி அளித்தார்,
Senthil Kumar 2020-07-15 17:42:43
புதுச்சேரியில் இன்று முதல்வர் நாராயணசாமி அவர்கள் பேட்டியின் போது நேற்று 470 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்து உள்ள நிலையில் புதுச்சேரியில் 57 பேரும், ஏனாம் பகுதியில் 10 பேரும் ஆக மொத்தம் இன்று புதிதாக 67 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், இதுவரை புதுச்சேரியில் 1596 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 889 பேர் குணமடைந்து வீட்டு க்கு சென்ற நிலையில், தற்போது 686 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர் என்றும், இதில் குணமடைந்தவர்கள் 65% ஆகவும், இதில் 21 பேர் இறந்துள்ளனர். இது 1.5% ஆகவும், தற்போது கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் விரைவில் குணமடைந்து செல்கின்றனர். தற்போது புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு கொஞ்ச கொஞ்சமாக குறைந்து வருகிறது. தற்போது கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனை,ஜிப்மர் மருத்துவமனை உட்பட தனியார் மருத்துவ மனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் அதிக அளவில் கொரோனா நோயாளிகள் இருப்பதால், தனியார் மருத்துவமனைகளில் பிரித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது மத்திய சுகாதாரத்துறை மூலம் அதிக அளவில் பரிசோதனை செய்ய வேண்டும் தகவல் வந்து உள்ளது. புதுச்சேரியில் ஏற்கனவே ஒரு நாளைக்கு 300 பேர் பரிசோதனை செய்து வந்தோம். இப்போது 870 பேருக்கு பரிசோதனை செய்து வருகிறோம் என்றும், தற்போது என்னிடம் இரண்டு கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். அதில் ஒரு பெண்ணுக்கு கொரோனா என்றால், அந்த குழந்தையை தனியாக பாதுகாப்புதும், பிறகு பிறந்த குழந்தைக்கு கொரோனா பாதிப்பு என்றால், அந்த குழந்தையை தனியாக சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தற்போது கிராமபுற பகுதிகளில் ஒவ்வொரு வீட்டிலும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தற்போது மத்திய அரசு, புதுச்சேரி மாநிலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னும் ஒப்புதல் அளிக்க வில்லை. புதுச்சேரி மாநிலத்தில் தற்போது பொருளாதார வளர்ச்சி மிகவும் பாதித்துள்ளது. எனவே வருகின்ற ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் சுற்றுலா வளர்ச்சி மேம்படுத்தும் வகையில், சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டினர் புதுச்சேரி மாநிலத்தில் வந்து தங்கினால் தான் வருமானம் பெருகும், இது சம்மந்தமாக மத்திய அரசிடம் கடிதம் மூலம் வலியுறுத்த உள்ளேன். இதனால் புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதிகள் மூலம் சுற்றுலா பயணிகள் வந்து தங்கினால் தான் வருமானம் பெருகும். தற்போது கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடமும், தமிழகம் இரண்டாம் இடத்திலும், டெல்லி மூன்றாம் இடத்தில் இருப்பதால், புதுச்சேரியில் பொருளாதார வளர்ச்சியை பெருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், தற்போது மழைக்காலம் வருவதால், பல தொற்றுநோய்கள் வரும் இதில் கொரோனா ஒரு புறம், டெங்கு காய்ச்சல், சிக்கன் குனியா போன்ற நோய்கள் பரவாமல் இருக்க, தங்களது வீடுகளை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும் என்றும், இதில் யாருக்காவது காய்ச்சல் என்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இதில் கிராமங்களில் உள்ள மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும், இந்த கொரோனா உச்சக்கட்டத்தில் இருந்து, இப்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இதில் மக்கள் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். பொது மக்கள் தொடர்ந்து முகக்கவசம், சமூக இடைவேளி, திருமணம் நிகழ்ச்சிகளில் அதிக அளவில் கலந்து கொள்ளக்கூடாது, பொது இடங்களில் தேவையில்லாமல் சுற்றுவதை நிறுத்த வேண்டும். இதற்கு முக்கிய பணி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்பு மிகவும் முக்கியமானது. புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்து வரும் காவல் துறை, சுகாதாரத்துறை, வருவாய் துறை உட்பட அனைவருக்கும் என்னுடைய பாராட்டு க்களை தெரிவித்து கொள்கிறேன் என்று பேட்டி அளித்தார்.
புதுச்சேரி முதல்வர் தொகுதியில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கும் காவல்துறைக்கு தள்ளுமுள்ளு.
Senthil Kumar 2020-07-15 14:38:34
புதுச்சேரி : புதுச்சேரி முதல்வர் தொகுதியில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கும் காவல்துறைக்கு தள்ளுமுள்ளு.
பிரான்ஸ் நாட்டு தேசிய தின விழாவை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மாவட்ட ஆட்சியர், பிரென்ச் துணை தூதர் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
Senthil Kumar 2020-07-14 17:45:46
கடந்த 1789-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி பிரான்ஸ் நாட்டில் இருந்த மன்னராட்சியை பாரீஸ் நகரில் உள்ள பஸ்தி என்ற சிறைச்சாலையை மக்கள் புரட்சி மூலம் தகர்த்து முடிவுக்கு கொண்டு வந்து மக்களாட்சியை நிறுவினர்.
புதுச்சேரியில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ் அவர்கள் பேட்டியின் போது,
Senthil Kumar 2020-07-14 12:30:58
புதுச்சேரியில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ் அவர்கள் பேட்டி யின் போது, புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனம் ஆகிய பகுதிகளில் இன்று புதிதாக 63 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் புதுச்சேரியில் 51பேரும், காரைக்கால் பகுதியில் 2 பேரும், ஏனாம் பகுதியில் 10 ஆக மொத்தம் 63 பேர் இன்று பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை புதுச்சேரியில் மொத்தம் 1531பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 829 பேர் குணமடைந்து வீட்டு க்கு சென்ற நிலையில், தற்போது புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனம் ஆகிய பகுதிகளில் மொத்தம் 684 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர் என்றும், இதுவரை புதுச்சேரியில் மட்டும் 18 பேர் இறந்து ள்ளனர். நேற்று காலை 10 மணியிலிருந்து இன்று காலை 10 மணி வரை 637 பேருக்கு பரிசோதனை செய்து உள்ள நிலையில், இன்று மட்டும் 63 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதால் பொது மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்றும், அனைவரும் முகக்கவசத்துடனும், சமூக இடைவேளியுடன் இருக்க வேண்டும் என்று பேட்டி அளித்தார்.
புதுச்சேரியில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ் அவர்கள் பேட்டியின் போது,
Senthil Kumar 2020-07-13 15:40:16
புதுச்சேரியில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ் அவர்கள் பேட்டியின் போது, நேற்று காலை 10 மணியிலிருந்து இன்று காலை 10 மணி வரை புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனம் ஆகிய பகுதிகளில் இன்று பரிசோதனை செய்து உள்ள நிலையில் புதிதாக 50 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் இதுவரை 1468 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 785 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்ற நிலையில், தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் 685 உள்ளனர். இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், தற்போது புதுச்சேரியில் மட்டும் 586 பேரும், காரைக்கால் பகுதியில் 53 பேரும், ஏனாம் பகுதியில் 25, மாகே பகுதியில் ஒருவர் என மொத்தம் புதுச்சேரியில் மட்டும் இதுவரை 685 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று முதல் சுகாதாரத்துறை ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவலர் களுக்கு பரிசோதனை செய்து வருகிறோம் என்று பேட்டி அளித்தார்.
புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் பாகூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தனவேல் அவர்களை தகுதி நீக்கம் செய்ததைக் கண்டித்து, அவருடைய ஆதரவாளர்கள் இன்று, முதல்வர் நாராயணசாமி அவர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
Senthil Kumar 2020-07-11 18:09:39
புதுச்சேரி : புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் பாகூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தனவேல் அவர்களை தகுதி நீக்கம் செய்ததைக் கண்டித்து, அவருடைய ஆதரவாளர்கள் இன்று, முதல்வர் நாராயணசாமி அவர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.பின்பு முதல்வர் நாராயணசாமி அவர்களின் உருவ பொம்மை எரித்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ் அவர்கள் பேட்டியின் போது,
Senthil Kumar 2020-07-11 13:30:55
புதுச்சேரியில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ் அவர்கள் பேட்டியின் போது, நேற்று காலை 10 மணியிலிருந்து இன்று காலை 10 மணி வரை புதுச்சேரியில் 48 பேரும், காரைக்கால் பகுதியில் 10 பேரும், ஏனாம் பகுதிகளில் 5 பேர், மாகே பகுதியில் ஒருவர் என இன்று மட்டும் புதிதாக 64 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் இதுவரை 1337 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது 629 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர் என்றும், இதுவரை 690 பேர் குணமடைந்து வீட்டு க்கு சென்ற நிலையில், புதுச்சேரியில் மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அவர்கள், ஆளுநர் வேலையை மட்டும் பார்க்க வேண்டும். அதைவிட்டு விட்டு, நாங்கள் கவர்னர் மாளிகையில் 37பேருக்கு பரிசோதனை செய்து உள்ள நிலையில், ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று சொன்னால், அது இல்லை என்று மறுக்கிறார். எங்களுடைய அரசு தினமும் பொது மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்றும், அவ்வப்போது கடந்த 20 தினங்களாக பரிசோதனை செய்து வருகிறோம். ஆனால் எங்கள் அரசு மீது வீண்பழியை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அவர்கள் கூறியும், அரசு அதிகாரிகளை மிரட்டும் விதத்தில் இருக்கிறார். இந்தியா முழுவதும் இவரை போன்று கவர்னர் யாரும் இல்லை. தற்போது ரெயின்போ நகரைச் சேர்ந்த 74 வயது உடைய ஆண் சளி இருமல் அதிகமான காரணத்தால் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனை யில் நேற்று சிகிச்சை அளித்த மருத்துவர்கள், கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று மாலை உயிர் இழந்துள்ளார் என்று பேட்டி அளித்தார்.
புதுச்சேரி சட்டசபையில் இன்று மூன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் திடீர் தர்ணா போராட்டம்.
Senthil Kumar 2020-07-10 15:36:29
புதுச்சேரி சட்டசபையில் இன்று மூன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் திடீர் தர்ணா போராட்டம். புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் இன்று அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அன்பழகன் அவர்கள் தலைமையில், வையாபுரி மணிகண்டன், பாஸ்கரன் ஆகிய மூன்று பேரும் திடீர் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். தற்போது முதல்வர் கொரோனா நிவாரண நிதி ரூ.9 கோடி வந்து உள்ளதாகவும், ஆனால் புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவி 1250 பேருக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், ஆனால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளில், முதல்வர் நிவாரண நிதி மூலம் இதுவரை பணம், காய்கறிகள் மற்றும் அரிசி வழங்க வில்லை என்றும், இந்த ரூ.9 கோடியை என்ன செலவு செய்தார் என்றும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5000 வழங்க வேண்டும் என்று இன்று தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரியில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ் அவர்கள் பேட்டியின் போது,
Senthil Kumar 2020-07-09 13:47:05
புதுச்சேரியில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ் அவர்கள் பேட்டியின் போது, புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனம் ஆகிய பகுதிகளில், நேற்று காலை 10 மணியிலிருந்து இன்று காலை 10 மணி வரை பரிசோதனை செய்து உள்ள நிலையில், இன்று புதிதாக 49 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனை யில் 42 பேரும், ஜிப்மர் மருத்துவமனையில் 7 பேரும் உள்ளனர். இதில் காரைக்கால், மாகே மற்றும் ஏனம் ஆகிய பகுதிகளில் புதிதாக யாருக்கும் இல்லை என்றும், புதுச்சேரி, மாகே ஆகிய பகுதிகளில் இன்று மட்டும் 30 பேர் குணமடைந்து வீட்டு க்கு சென்ற நிலையில், இதுவரை 772 பேருக்கு பரிசோதனை செய்து உள்ள நிலையில் 49 பேருக்கு இன்று புதிதாக வந்து உள்ளது தற்போது புதுச்சேரியில் இதுவரை 1200 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் இதுவரை 619 பேர் குணமடைந்து வீட்டு க்கு சென்ற நிலையில், தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் 565 பேர் உள்ளனர். இதில் ஜிப்மர் மருத்துவமனையில் சுல்தான் பேட்டையை சேர்ந்த 48 வயது உடைய ஆண், அதேபோல் காரைக்கால் பகுதியில் 60 வயதுடைய ஆண் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இதுவரை 14 பேர் புதுச்சேரியில் மட்டும் உயிர் இழந்துள்ளனர். தற்போது புதுச்சேரியில் கொரோனா அதிகமாக பரவியுள்ளது என்பதால், அதற்கு முக்கிய காரணம் பொது மக்கள் அதிக அளவில் கூட்டமாக மார்க்கெட் பகுதி, கடைகளில் சமூக இடைவேளி இல்லாமல் இருப்பதால், ஒரு சிலர் முகக்கவசம் அணிந்து செல்ல வில்லை. எனவே தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு போடலாமா என்று தற்போது முதல்வர் நாராயணசாமி அவர்களிடம் கூறி உள்ளேன். அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று பேட்டி அளித்தார்.
புதுச்சேரி ராஜ்னிவாஸ் அலுவலக பணியாளர் ஒருவருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவசர அவசரமாக ஆளுநர் மாளிகை மூடப்பட்டது..
Senthil Kumar 2020-07-08 20:04:11
புதுச்சேரி ராஜ்னிவாஸ் அலுவலக பணியாளர் ஒருவருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவசர அவசரமாக ஆளுநர் மாளிகை மூடப்பட்டது..
புதுச்சேரியில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ் அவர்கள் பேட்டியின் போது,
Senthil Kumar 2020-07-08 14:23:44
புதுச்சேரியில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ் அவர்கள் பேட்டியின் போது, புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனம் ஆகிய பகுதிகளில் இன்று மட்டும் புதிதாக 112 பேருக்கு கொரோனா பாதிப்பில் இதுவரை இல்லாத அளவில் அதிகரித்து வருகிறது. இதில் புதுச்சேரியில் மட்டும் 79 பேர், காரைக்கால் பகுதியில் 25பேரும், ஏனாம் பகுதியில் 8 பேர் என இன்று மட்டும் 112 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், இதுவரை புதுச்சேரியில் மொத்தம் 1151 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 584 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்ற நிலையில், தற்போது 553 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர் என்றும், புதுச்சேரியில் மட்டும் 493 பேரும், காரைக்கால் பகுதியில் 33 பேரும், ஏனாம் பகுதியில் 20 பேரும், மாகே பகுதியில் 7 பேரும் ஆக மொத்தம் 553 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர் என்றும், இதுவரை 14 பேர் இறந்துள்ளனர் .எனவே பொது மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்று பேட்டி அளித்தார்.
புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது திருடப்பட்ட13 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீசார்.
Senthil Kumar 2020-07-03 21:45:59
புதுச்சேரி : புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது திருடப்பட்ட13 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீசார்.
புதுச்சேரியில் இன்று முதல்வர் நாராயணசாமி அவர்கள் பேட்டி அளித்தார்,
Senthil Kumar 2020-07-03 21:03:43
புதுச்சேரியில் இன்று முதல்வர் நாராயணசாமி அவர்கள் பேட்டியின், புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனம் ஆகிய பகுதிகளில் 633 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்து உள்ள நிலையில், இன்று மட்டும் 23 பேர் புதுச்சேரியிலும், ஒருவர் காரைக்கால் பகுதியிலும், ஆக மொத்தம் இன்று மட்டும் 24 பேர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், மாகே மற்றும் ஏனம் ஆகிய பகுதிகளில் இன்று யாருக்கும் பாதிப்பு இல்லை. தற்போது புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனம் ஆகிய பகுதிகளில் 427 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர் என்றும், இதுவரை 384 பேர் குணமடைந்து வீட்டு க்கு சென்ற நிலையில், இதுவரை 13 பேர் இறந்துள்ளனர், புதுச்சேரியில் 20 ஆயிரம் பேருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்து உள்ள நிலையில், இன்று 633 பேருக்கு பரிசோதனையில், 24 பேருக்கு என்றால், 3% பாதிப்பு தான், தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஜிப்மர் மருத்துவமனை யில் ஒரு நாளைக்கு 1000 பேர் பரிசோதனை, கதிர் காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனை யில் 400 பேரும் என பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்றும், தற்போது தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. தற்போது இன்று பிம்ஸ் மருத்துவமனையில் பரிசோதனை செய்து வருகிறார்கள். தற்போது வெங்கடேசுவரா மருத்துவமனை, அறுப்படை, லஷ்மிநாராயணா உட்பட தனியார் மருத்துவ மனையில் பரிசோதனை மையம் அமைக்க வேண்டும். தற்போது வில்லியனூர், கரிக்கலாம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உமிழ்நீர் பரிசோதனை மையம் அமைக்க உள்ளோம். இதே போல் காரைக்கால், மாகே மற்றும் ஏனம் பகுதியில் மையம் அமைக்க ஏற்பாடு செய்து வருவதாகவும், தற்போது தடுப்பு மருந்துகள் காரைக்கால், மாகே, ஏனாம் பகுதிகளில் கொடுத்து வருகிறோம். நேற்று காரைக்கால் பகுதியிலும் சென்னையில் இருந்து வந்தவர்கள் மூலம் கொரோனா பரவி வருகிறது என்பதால், தற்போது காரைக்கால் பகுதியில் விநாயகா மிஷின் தனியார் மருத்துவ மனையின் மூலம் பரிசோதனை மையம் அமைக்க உள்ளோம். தற்போது அனைத்து தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பு சிகிச்சை அளிக்கும் நேரத்தில், அங்கு கிராம பகுதிகளில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்று என்னிடம் புகார்கள் அளித்தார்கள். எனவே பொது மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மேலும் காவல் துறையினர், வியாபாரிகளுக்கு நண்பன் ஆக இருக்க வேண்டும். எனவே காவல் துறையினர் முகக்கவசம் அணிந்து செல்லாத வியாபாரம் செய்து வரும் கடைகளில் சீல் வைக்கப்பட்டது என்று தகவல் வந்து உள்ளது. எனவே வியாபாரிகளிடம் வரும் பொது மக்கள் முகக்கவசத்துடன் வர வேண்டும் என்று அறிவுரை கூற வேண்டும். தற்போது மத்திய அரசு இரயில்வே துறையை தனியார் மயமாக்கப்படுவதை நிறுத்த வேண்டும். ஏற்கனவே பேருந்துகள் தனியார் மையம், தற்போது மின் துறையை தனியார் மயமாக்கப்படுவதை நிறுத்த வேண்டும். தற்போது இரயில்வே துறையானது, பொது நிறுவனங்கள் என்பதால், கூலிதொழிலாளி அதிக அளவில் பயன்படுத்தக் கூடிய துறை இரயில்வே துறை. எனவே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இரயில்வே துறை மூலம் ரூ.600 க்கு சாதாரண ஏழைகள் டெல்லிக்கு செல்ல முடியும். மேலும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் பல்வேறு மாநிலங்களில் இரயில் மூலம் செல்கிறார்கள். இந்த இரயில் சேவை ஜவஹர்லால் நேரு காலத்தில் இருந்து மக்களின் பொது சேவையாக உள்ளது. தற்போது இரயில்வே துறை தனியார் மயமாக்கப்பட்டால், இரயில் கட்டணம் உயர்ந்து விடும். இது சாதாரண ஏழைகள் மக்கள் பயன்படுத்தும் இரயில்வே துறையை தனியார் மயமாக்கப்பட்டால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள் எனவே மத்திய அரசு இரயில்வே துறை யை தனியார் மயமாக்கப்படு வதை நிறுத்த வேண்டும் என்றும், இதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், இந்த தருணத்தில் புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்து வரும் காவல் துறை, வருவாய் துறை, சுகாதாரத்துறை, ஆஷா பணியாளர்கள் அனைவரையும் பாராட்டி கொள்கிறேன். இன்று முதல் இரவு 8 மணி வரை கடைகள் திறக்கப்படும் என்பதால், இன்று பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தற்போது புதுச்சேரி மக்கள் 95% பேர் முகக்கவசம் அணிந்து வருகிறார்கள். ஆனால் மார்க்கெட் மற்றும் கடைகளில் சமூக இடைவேளி யுடன் இருக்க வேண்டும் என்று பேட்டி அளித்தார்.
புதுச்சேரியில் இன்று முதல்வர் நாராயணசாமி அவர்கள் பேட்டி அளித்தார்.........
Senthil Kumar 2020-07-02 20:36:39
புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் கொரோனா பாதிப்பு இது வரை 28 பேருக்கு பரவியுள்ளதால், இன்று முதல்வர் நாராயணசாமி அவர்கள் நேரடியாக காரைக்கால் பகுதிக்கு சென்றார். பின்பு முதல்வர் நாராயணசாமி அவர்கள் பேட்டியின் போது, இன்று நானும், அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ் இருவரும் காரைக்கால் பகுதிக்கு சென்று கொரோனா பாதிப்பு பற்றி கேட்டு அறிந்தோம். மேலும் காரைக்கால் பகுதியில் உள்ள சுகாதாரத்துறை, வருவாய் துறை, உள்ளாட்சி துறை, துப்புரவு துறை மற்றும் அங்குள்ள மாவட்ட ஆட்சியரிடம், இந்த பகுதிகளில் அதிக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றியும், அந்த அந்த துறை செயலாளர்கள் எங்களிடம் காணொலியில் தொடர்பு கொண்டு பேசினார்கள். தற்போது புதுச்சேரியை போன்று காரைக்கால் பகுதியிலும், தற்போது 5 ஆம் கட்ட ஊரடங்கு தொடர்ந்து, இப்போது மத்திய அரசு சில தளர்வுகள் உடன் 6 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. காரைக்கால் பகுதியில் கொரோனா பாதிப்புக்கு காரணம், சென்னையில் இருந்து வருபவர்கள் மூலம் பரவி வருகிறது என்பதால், இந்த பகுதிகளில் 27 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதால், இதுவரை காரைக்கால் பகுதியில் 5 முறை பரிசோதனை செய்து உள்ள நிலையில், இதுவரை 2 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்து உள்ளோம். ஆனால் புதுச்சேரியில் 2 முறை மட்டுமே பரிசோதனை செய்து உள்ளோம். இங்கு உள்ள மக்களுக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்ய திருவாரூர் செல்வதால், கொரோனா வைரஸ் கண்டுப்பிடிக்க 2 நாட்கள் ஆகிறது. எனவே காரைக்கால் பகுதியில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க வேண்டும் என்றும், இன்று முதல் காரைக்கால் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள 27 பகுதிகளில், முதல்வர் நிவாரண நிதி மூலம், அங்கு உள்ள மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் வழங்க உத்தரவு விட்டு உள்ளேன். எனவே காரைக்கால் எல்லைப்பகுதியில் பலத்த பாதுகாப்புடன் தடுத்து வருகிறார்கள். எனவே இங்கு உள்ள அமைச்சர் கமலக்கண்ணன், சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேட்டி அளித்தார்.
புதுச்சேரியில் ராஜ்பவன் தொகுதி வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பும் நிகழ்ச்சியில் முதல்வரின் பாராளுமன்ற செயலர் லட்சுமிநாராயண எம்எல்ஏ வட்டார தலைவர்வட்டார காங்கிரஸ் வட்டார தலைவர் வேல்முருகன் முன்னாள் கவுன்சிலர் குமரன் குணா முருகன் சக்திவேலு சங்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
Senthil Kumar 2020-07-02 20:22:37
புதுச்சேரி : புதுச்சேரியில் ராஜ்பவன் தொகுதி வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பும் நிகழ்ச்சியில் முதல்வரின் பாராளுமன்ற செயலர் லட்சுமிநாராயண எம்எல்ஏ வட்டார தலைவர்வட்டார காங்கிரஸ் வட்டார தலைவர் வேல்முருகன் முன்னாள் கவுன்சிலர் குமரன் குணா முருகன் சக்திவேலு சங்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
புதுச்சேரி: கோஷ்டி மோதலில் 2 பேர் அடித்துக் கொலை
Senthil Kumar 2020-07-02 20:15:26
புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள பிள்ளையார் குப்பம் பகுதியில் முன்விரோதம் காரணமாக கோஷ்டி மோதலில் 2 பேர் தடியால் அடித்துக் கொலை.
புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கட்சியின் தலைவர் சாமிநாதன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.
Senthil Kumar 2020-07-02 20:04:34
புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கட்சியின் தலைவர் சாமிநாதன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் மத்திய அரசு பதவி ஏற்று ஒரு ஆண்டுகள் ஆகி உள்ள நிலையில், இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய நாட்டின் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் 90 கோடி பேருக்கு இலவச அரிசி வழங்கி முதல் பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் தான் என்றும், இதில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஒருவருக்கு தலா 5 கிலோ இலவச மற்றும் ஒரு குடும்பத்தினருக்கு 1 கிலோ துவரம்பருப்பு வழங்கப்பட்டது. தற்போது புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி அவர்கள் கூறியதன் அடிப்படையில் தான், இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது என்று தவறான அறிக்கையை வெளியிட்ட வருகிறார். உலக முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நேரத்தில், இந்திய நாட்டில் உள்ள மக்கள் வறுமையில் யாரும் இறக்கக்கூடாது என்பதால், அனைத்து வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு 90 கோடி பேருக்கு இந்த இலவச அரிசியை வழங்கப்பட்டது. தற்போது மஞ்சள் ரேஷன் கார்டுகளுக்கும் மாதம் 10 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த இலவச அரிசி திட்டம் தொடர்ந்து நவம்பர் மாதம் வரை வழங்கப்படும் என்று பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் அறிவித்தார். தற்போது உலக நாடுகளில் உள்ள தலைவர்கள், பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு நன்றியை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் மத்திய அரசு நிதியுதவி கொடுக்க வில்லை என்று கூறி வருகிறார். புதுச்சேரியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அவரவர் வங்கி கணக்கில் நேரடியாக பணம் மத்திய அரசு கொடுத்து வருகிறது. இதை போல் விவசாயிகளுக்கு சலுகைகள் உட்பட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செய்து வருவதாகவும், புதுச்சேரி மாநிலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னும் ஓரிரு நாளில் மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கப்படும், தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் பட்ஜெட் தாக்கல் அறிவிப்புக்கு காவ தாமதம் ஆகிறது என்று பேட்டி அளித்தார்.
இந்தியா முழுவதும் தொடர்ந்து 19 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி வரும், மத்திய அரசுக்கு எதிராக சவப்பாடை ஊர்வலம் முத்தியால் பேட்டை பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் நடத்தினார்கள்.
Senthil Kumar 2020-07-02 15:48:06
இந்தியா முழுவதும் தொடர்ந்து 19 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி வரும், மத்திய அரசுக்கு எதிராக சவப்பாடை ஊர்வலம் முத்தியால் பேட்டை பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் நடத்தினார்கள். இன்று முத்தியால் பேட்டை மணிக்கூண்டு அருகில் இந்தியா முழுவதும் தொடர்ந்து 19 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி வரும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும், சவப்பாடையுடன் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.இந்த ஊர்வலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர். புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சங்கர் தலைமையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து, இருசக்கர வாகனத்தை சவப்பாடையாக அமைத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினார்கள். ர்பில் கோஷங்களை எழுப்பி கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
புதுச்சேரியில் இன்று சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் அவர்கள் பேட்டியின் போது, .........
Senthil Kumar 2020-07-02 11:23:43
புதுச்சேரியில் இன்று சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் அவர்கள் பேட்டியின் போது, இன்று புதுச்சேரியில் 60 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பரவி உள்ளது. நேற்று காலை முதல் இன்று காலை வரை 583 பேருக்கு பரிசோதனை செய்து உள்ள நிலையில், இன்று கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் 52 பேரும், ஜிப்மர் மருத்துவமனையில் 8 பேரும் சிகிச்சை பிரிவில் உள்ளனர். இன்று காரைக்கால் பகுதியில் 3 பேரும் சேர்த்து 28 பேர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், மாகே பகுதியில் 8 பேரும், ஏனாம் பகுதியில் 2 பேரும் சிகிச்சை பிரிவில் உள்ளனர் என்றும், இன்று 60 பேரில், 34 பேர் ஆண்களும், 29 பேர் பெண்கள் என, 18 வயதுக்கு உட்பட்ட நபர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று 30 நபர்கள் குணமடைந்து வீட்டு க்கு சென்ற நிலையில், தற்போது இது வரை புதுச்சேரியில் 802 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், இதில் 331 பேர் குணமடைந்து வீட்டு க்கு சென்ற நிலையில், தற்போது 459 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர் என்றும், புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனை யில் 250 பேரும், ஜிப்மர் மருத்துவமனை யில் 110 பேரும், தனியார் மருத்துவமனையில் 57 பேரும், புதுச்சேரியை சேர்ந்த வெளிமாநிலத்தில் 5 பேரும், ஆக மொத்தம் புதுச்சேரி, காரைக்கால், மாகே ஏனம் ஆகிய பகுதிகளில் 459 பேருக்கு கொரோனா தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர் என்றும், எனவே பொது மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்று பேட்டி அளித்தார்.

Top Stories

Home | Privacy Policy | Terms & Condition | Why RNI?