HIGHLIGHTS


புதுச்சேரி அருகே உள்ள கோட்டக்குப்பம் பகுதியில் கஞ்சா விற்பவர்களை காட்டி கொடுத்ததால் வாலிபர் ஓட ஓட வெட்டிபடுகொலை... உடலை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்ற்னர்.

Senthil Kumar 2020-05-27 17:11:32    VIDEO 4992




புதுச்சேரி அருகே உள்ள கோட்டக்குப்பம் பகுதியில் கஞ்சா விற்பவர்களை காட்டி கொடுத்ததால் வாலிபர் ஓட ஓட  வெட்டிபடுகொலை... உடலை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி  வருகின்ற்னர்.
புதுச்சேரி அருகே உள்ள கோட்டக்குப்பம் பகுதியில் கஞ்சா விற்பவர்களை காட்டி கொடுத்ததால் வாலிபர் ஓட ஓட வெட்டிபடுகொலை... உடலை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்ற்னர்.

புதுச்சேரி அருகேயுள்ள கோட்டக்குப்பம் பர்கத் நகரை சார்ந்தவர் நிசார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகின்றார். இவர் கஞ்சா அடிக்கும் பழக்கம் உள்ளவர் என்று கூறப்படுகின்றது. இவர் சமையல், கட்டிட வேலை பல்வேறு ஊர்களுக்கு சென்று செய்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று பகல் 12 மணியளவில் கோட்டக்குப்பம் சர்வேஷ் நகர் பகுதியில் அவரை இரண்டு பேர் ஓட ஓட விரட்டி பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்துவிட்டு, அவரது இருசக்கர வாகனத்தையே எடுத்துக்கொண்டு தப்பியோடி உள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்ற்னர். பட்டப்பகலில் ஓட ஓட வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அறிந்த விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கே வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும் அவர் பணம் கொடுக்கல் வாங்கலில் கொலை செய்யப்பட்டாரா , கஞ்சா விற்பனை செய்தவர்களை காட்டி கொடுத்ததால் கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்ற்னர்.








Related News

video

புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது திருடப்பட்ட13 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீசார்.
Senthil Kumar 2020-07-03 21:45:59
புதுச்சேரி : புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது திருடப்பட்ட13 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீசார்.
புதுச்சேரியில் இன்று முதல்வர் நாராயணசாமி அவர்கள் பேட்டி அளித்தார்,
Senthil Kumar 2020-07-03 21:03:43
புதுச்சேரியில் இன்று முதல்வர் நாராயணசாமி அவர்கள் பேட்டியின், புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனம் ஆகிய பகுதிகளில் 633 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்து உள்ள நிலையில், இன்று மட்டும் 23 பேர் புதுச்சேரியிலும், ஒருவர் காரைக்கால் பகுதியிலும், ஆக மொத்தம் இன்று மட்டும் 24 பேர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், மாகே மற்றும் ஏனம் ஆகிய பகுதிகளில் இன்று யாருக்கும் பாதிப்பு இல்லை. தற்போது புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனம் ஆகிய பகுதிகளில் 427 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர் என்றும், இதுவரை 384 பேர் குணமடைந்து வீட்டு க்கு சென்ற நிலையில், இதுவரை 13 பேர் இறந்துள்ளனர், புதுச்சேரியில் 20 ஆயிரம் பேருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்து உள்ள நிலையில், இன்று 633 பேருக்கு பரிசோதனையில், 24 பேருக்கு என்றால், 3% பாதிப்பு தான், தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஜிப்மர் மருத்துவமனை யில் ஒரு நாளைக்கு 1000 பேர் பரிசோதனை, கதிர் காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனை யில் 400 பேரும் என பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்றும், தற்போது தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. தற்போது இன்று பிம்ஸ் மருத்துவமனையில் பரிசோதனை செய்து வருகிறார்கள். தற்போது வெங்கடேசுவரா மருத்துவமனை, அறுப்படை, லஷ்மிநாராயணா உட்பட தனியார் மருத்துவ மனையில் பரிசோதனை மையம் அமைக்க வேண்டும். தற்போது வில்லியனூர், கரிக்கலாம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உமிழ்நீர் பரிசோதனை மையம் அமைக்க உள்ளோம். இதே போல் காரைக்கால், மாகே மற்றும் ஏனம் பகுதியில் மையம் அமைக்க ஏற்பாடு செய்து வருவதாகவும், தற்போது தடுப்பு மருந்துகள் காரைக்கால், மாகே, ஏனாம் பகுதிகளில் கொடுத்து வருகிறோம். நேற்று காரைக்கால் பகுதியிலும் சென்னையில் இருந்து வந்தவர்கள் மூலம் கொரோனா பரவி வருகிறது என்பதால், தற்போது காரைக்கால் பகுதியில் விநாயகா மிஷின் தனியார் மருத்துவ மனையின் மூலம் பரிசோதனை மையம் அமைக்க உள்ளோம். தற்போது அனைத்து தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பு சிகிச்சை அளிக்கும் நேரத்தில், அங்கு கிராம பகுதிகளில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்று என்னிடம் புகார்கள் அளித்தார்கள். எனவே பொது மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மேலும் காவல் துறையினர், வியாபாரிகளுக்கு நண்பன் ஆக இருக்க வேண்டும். எனவே காவல் துறையினர் முகக்கவசம் அணிந்து செல்லாத வியாபாரம் செய்து வரும் கடைகளில் சீல் வைக்கப்பட்டது என்று தகவல் வந்து உள்ளது. எனவே வியாபாரிகளிடம் வரும் பொது மக்கள் முகக்கவசத்துடன் வர வேண்டும் என்று அறிவுரை கூற வேண்டும். தற்போது மத்திய அரசு இரயில்வே துறையை தனியார் மயமாக்கப்படுவதை நிறுத்த வேண்டும். ஏற்கனவே பேருந்துகள் தனியார் மையம், தற்போது மின் துறையை தனியார் மயமாக்கப்படுவதை நிறுத்த வேண்டும். தற்போது இரயில்வே துறையானது, பொது நிறுவனங்கள் என்பதால், கூலிதொழிலாளி அதிக அளவில் பயன்படுத்தக் கூடிய துறை இரயில்வே துறை. எனவே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இரயில்வே துறை மூலம் ரூ.600 க்கு சாதாரண ஏழைகள் டெல்லிக்கு செல்ல முடியும். மேலும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் பல்வேறு மாநிலங்களில் இரயில் மூலம் செல்கிறார்கள். இந்த இரயில் சேவை ஜவஹர்லால் நேரு காலத்தில் இருந்து மக்களின் பொது சேவையாக உள்ளது. தற்போது இரயில்வே துறை தனியார் மயமாக்கப்பட்டால், இரயில் கட்டணம் உயர்ந்து விடும். இது சாதாரண ஏழைகள் மக்கள் பயன்படுத்தும் இரயில்வே துறையை தனியார் மயமாக்கப்பட்டால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள் எனவே மத்திய அரசு இரயில்வே துறை யை தனியார் மயமாக்கப்படு வதை நிறுத்த வேண்டும் என்றும், இதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், இந்த தருணத்தில் புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்து வரும் காவல் துறை, வருவாய் துறை, சுகாதாரத்துறை, ஆஷா பணியாளர்கள் அனைவரையும் பாராட்டி கொள்கிறேன். இன்று முதல் இரவு 8 மணி வரை கடைகள் திறக்கப்படும் என்பதால், இன்று பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தற்போது புதுச்சேரி மக்கள் 95% பேர் முகக்கவசம் அணிந்து வருகிறார்கள். ஆனால் மார்க்கெட் மற்றும் கடைகளில் சமூக இடைவேளி யுடன் இருக்க வேண்டும் என்று பேட்டி அளித்தார்.
புதுச்சேரியில் இன்று முதல்வர் நாராயணசாமி அவர்கள் பேட்டி அளித்தார்.........
Senthil Kumar 2020-07-02 20:36:39
புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் கொரோனா பாதிப்பு இது வரை 28 பேருக்கு பரவியுள்ளதால், இன்று முதல்வர் நாராயணசாமி அவர்கள் நேரடியாக காரைக்கால் பகுதிக்கு சென்றார். பின்பு முதல்வர் நாராயணசாமி அவர்கள் பேட்டியின் போது, இன்று நானும், அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ் இருவரும் காரைக்கால் பகுதிக்கு சென்று கொரோனா பாதிப்பு பற்றி கேட்டு அறிந்தோம். மேலும் காரைக்கால் பகுதியில் உள்ள சுகாதாரத்துறை, வருவாய் துறை, உள்ளாட்சி துறை, துப்புரவு துறை மற்றும் அங்குள்ள மாவட்ட ஆட்சியரிடம், இந்த பகுதிகளில் அதிக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றியும், அந்த அந்த துறை செயலாளர்கள் எங்களிடம் காணொலியில் தொடர்பு கொண்டு பேசினார்கள். தற்போது புதுச்சேரியை போன்று காரைக்கால் பகுதியிலும், தற்போது 5 ஆம் கட்ட ஊரடங்கு தொடர்ந்து, இப்போது மத்திய அரசு சில தளர்வுகள் உடன் 6 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. காரைக்கால் பகுதியில் கொரோனா பாதிப்புக்கு காரணம், சென்னையில் இருந்து வருபவர்கள் மூலம் பரவி வருகிறது என்பதால், இந்த பகுதிகளில் 27 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதால், இதுவரை காரைக்கால் பகுதியில் 5 முறை பரிசோதனை செய்து உள்ள நிலையில், இதுவரை 2 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்து உள்ளோம். ஆனால் புதுச்சேரியில் 2 முறை மட்டுமே பரிசோதனை செய்து உள்ளோம். இங்கு உள்ள மக்களுக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்ய திருவாரூர் செல்வதால், கொரோனா வைரஸ் கண்டுப்பிடிக்க 2 நாட்கள் ஆகிறது. எனவே காரைக்கால் பகுதியில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க வேண்டும் என்றும், இன்று முதல் காரைக்கால் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள 27 பகுதிகளில், முதல்வர் நிவாரண நிதி மூலம், அங்கு உள்ள மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் வழங்க உத்தரவு விட்டு உள்ளேன். எனவே காரைக்கால் எல்லைப்பகுதியில் பலத்த பாதுகாப்புடன் தடுத்து வருகிறார்கள். எனவே இங்கு உள்ள அமைச்சர் கமலக்கண்ணன், சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேட்டி அளித்தார்.
புதுச்சேரியில் ராஜ்பவன் தொகுதி வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பும் நிகழ்ச்சியில் முதல்வரின் பாராளுமன்ற செயலர் லட்சுமிநாராயண எம்எல்ஏ வட்டார தலைவர்வட்டார காங்கிரஸ் வட்டார தலைவர் வேல்முருகன் முன்னாள் கவுன்சிலர் குமரன் குணா முருகன் சக்திவேலு சங்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
Senthil Kumar 2020-07-02 20:22:37
புதுச்சேரி : புதுச்சேரியில் ராஜ்பவன் தொகுதி வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பும் நிகழ்ச்சியில் முதல்வரின் பாராளுமன்ற செயலர் லட்சுமிநாராயண எம்எல்ஏ வட்டார தலைவர்வட்டார காங்கிரஸ் வட்டார தலைவர் வேல்முருகன் முன்னாள் கவுன்சிலர் குமரன் குணா முருகன் சக்திவேலு சங்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
புதுச்சேரி: கோஷ்டி மோதலில் 2 பேர் அடித்துக் கொலை
Senthil Kumar 2020-07-02 20:15:26
புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள பிள்ளையார் குப்பம் பகுதியில் முன்விரோதம் காரணமாக கோஷ்டி மோதலில் 2 பேர் தடியால் அடித்துக் கொலை.
புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கட்சியின் தலைவர் சாமிநாதன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.
Senthil Kumar 2020-07-02 20:04:34
புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கட்சியின் தலைவர் சாமிநாதன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் மத்திய அரசு பதவி ஏற்று ஒரு ஆண்டுகள் ஆகி உள்ள நிலையில், இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய நாட்டின் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் 90 கோடி பேருக்கு இலவச அரிசி வழங்கி முதல் பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் தான் என்றும், இதில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஒருவருக்கு தலா 5 கிலோ இலவச மற்றும் ஒரு குடும்பத்தினருக்கு 1 கிலோ துவரம்பருப்பு வழங்கப்பட்டது. தற்போது புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி அவர்கள் கூறியதன் அடிப்படையில் தான், இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது என்று தவறான அறிக்கையை வெளியிட்ட வருகிறார். உலக முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நேரத்தில், இந்திய நாட்டில் உள்ள மக்கள் வறுமையில் யாரும் இறக்கக்கூடாது என்பதால், அனைத்து வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு 90 கோடி பேருக்கு இந்த இலவச அரிசியை வழங்கப்பட்டது. தற்போது மஞ்சள் ரேஷன் கார்டுகளுக்கும் மாதம் 10 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த இலவச அரிசி திட்டம் தொடர்ந்து நவம்பர் மாதம் வரை வழங்கப்படும் என்று பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் அறிவித்தார். தற்போது உலக நாடுகளில் உள்ள தலைவர்கள், பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு நன்றியை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் மத்திய அரசு நிதியுதவி கொடுக்க வில்லை என்று கூறி வருகிறார். புதுச்சேரியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அவரவர் வங்கி கணக்கில் நேரடியாக பணம் மத்திய அரசு கொடுத்து வருகிறது. இதை போல் விவசாயிகளுக்கு சலுகைகள் உட்பட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செய்து வருவதாகவும், புதுச்சேரி மாநிலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னும் ஓரிரு நாளில் மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கப்படும், தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் பட்ஜெட் தாக்கல் அறிவிப்புக்கு காவ தாமதம் ஆகிறது என்று பேட்டி அளித்தார்.
இந்தியா முழுவதும் தொடர்ந்து 19 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி வரும், மத்திய அரசுக்கு எதிராக சவப்பாடை ஊர்வலம் முத்தியால் பேட்டை பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் நடத்தினார்கள்.
Senthil Kumar 2020-07-02 15:48:06
இந்தியா முழுவதும் தொடர்ந்து 19 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி வரும், மத்திய அரசுக்கு எதிராக சவப்பாடை ஊர்வலம் முத்தியால் பேட்டை பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் நடத்தினார்கள். இன்று முத்தியால் பேட்டை மணிக்கூண்டு அருகில் இந்தியா முழுவதும் தொடர்ந்து 19 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி வரும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும், சவப்பாடையுடன் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.இந்த ஊர்வலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர். புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சங்கர் தலைமையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து, இருசக்கர வாகனத்தை சவப்பாடையாக அமைத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினார்கள். ர்பில் கோஷங்களை எழுப்பி கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
புதுச்சேரியில் இன்று சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் அவர்கள் பேட்டியின் போது, .........
Senthil Kumar 2020-07-02 11:23:43
புதுச்சேரியில் இன்று சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் அவர்கள் பேட்டியின் போது, இன்று புதுச்சேரியில் 60 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பரவி உள்ளது. நேற்று காலை முதல் இன்று காலை வரை 583 பேருக்கு பரிசோதனை செய்து உள்ள நிலையில், இன்று கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் 52 பேரும், ஜிப்மர் மருத்துவமனையில் 8 பேரும் சிகிச்சை பிரிவில் உள்ளனர். இன்று காரைக்கால் பகுதியில் 3 பேரும் சேர்த்து 28 பேர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், மாகே பகுதியில் 8 பேரும், ஏனாம் பகுதியில் 2 பேரும் சிகிச்சை பிரிவில் உள்ளனர் என்றும், இன்று 60 பேரில், 34 பேர் ஆண்களும், 29 பேர் பெண்கள் என, 18 வயதுக்கு உட்பட்ட நபர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று 30 நபர்கள் குணமடைந்து வீட்டு க்கு சென்ற நிலையில், தற்போது இது வரை புதுச்சேரியில் 802 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், இதில் 331 பேர் குணமடைந்து வீட்டு க்கு சென்ற நிலையில், தற்போது 459 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர் என்றும், புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனை யில் 250 பேரும், ஜிப்மர் மருத்துவமனை யில் 110 பேரும், தனியார் மருத்துவமனையில் 57 பேரும், புதுச்சேரியை சேர்ந்த வெளிமாநிலத்தில் 5 பேரும், ஆக மொத்தம் புதுச்சேரி, காரைக்கால், மாகே ஏனம் ஆகிய பகுதிகளில் 459 பேருக்கு கொரோனா தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர் என்றும், எனவே பொது மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்று பேட்டி அளித்தார்.
புதுச்சேரியில் இன்று முதல்வர் நாராயணசாமி அவர்கள் பேட்டி அளித்தார்......
Senthil Kumar 2020-06-29 17:55:29
புதுச்சேரியில் இன்று முதல்வர் நாராயணசாமி அவர்கள் பேட்டியின் போது புதுச்சேரி மாநில பேரிடர் மூலம் கொரோனா பரிசோதனை அதிகரிக்கும் வகையில் தினமும் 504 லிருந்து 544 பேருக்கு பரிசோதனை செய்து வரும் நிலையில், 40 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் வந்து உள்ளது. தற்போது 397 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர் என்றும், சட்டசபையில் என்னுடைய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு என்பதால், அங்கு உள்ள 52 நபர்கள் மற்றும் என் காவல்துறை பணியாளர்கள் 40 பேருக்கும் பரிசோதனை செய்து உள்ள நிலையில், எனக்கும் பரிசோதனை செய்து, யாருக்கும் இல்லை என்று தகவல் வந்து உள்ளது. ஆனால் மருத்துவ அதிகாரிகள் என்னை 5 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்க சொல்லி இருக்கிறார்கள். தற்போது இன்று சட்டமன்ற முழுவதும் கிருமிநாசினி மருந்துகள் அடிக்கப்பட்டன. புதுச்சேரி கிராம பகுதியான வில்லியனூர் பகுதியில் நடமாடும் மருத்துவமனை மூலம் பரிசோதனை செய்து வருகிறார்கள், இதை போல் போல் நகரப்பகுதியிலும், ஜிப்மர் மருத்துவமனை யில் ஒரு நாளைக்கு 1000 பேருக்கு பரிசோதனை செய்யலாம், அதே போல் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் தினமும் 300 பேருக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி வருகிறோம் இதன் மூலம் கொரோனா தொற்றுநோய் கட்டுப்பாட்டில் வைக்க முடியும், தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தற்போது கூனிச்சப்பட்டு பகுதியில் முகக்கவசம் தயாரிக்கும் கம்பெனியின் மூலம், அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவி வருவதால், அந்த பகுதியை நேரடியாக சென்று, அங்கு உள்ள மக்களுக்கு 163 பேருக்கு மேல் பரவி உள்ளதால், அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு ஆறுதல் கூறியும், தற்போது புதுச்சேரி மாநிலத்தில் எல்லைப்பகுதிகள் மூடப்பட்டுள்ள நிலையில் படிப்படியாக கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்து வருகிறோம். இந்த தனிமைப்படுத்தப்பட்டு உள்ள கிராமப்புற பகுதிகளில், யாருக்கும் தெரியாமல் வெளியே வருகிறார்கள் இதன் மூலம் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே காவல் துறை அவர்களை கண்காணிக்க வேண்டும் என்றும், சென்னை கோயம்பேட்டில் பரவ ஆரம்பித்த இந்த கொரோனா தமிழக பகுதிகளில் இன்று அகில இந்திய 3 வது இடத்தில் உள்ளது என்றும்,இது மக்களின் மெத்தன போக்கு என்பதால், மக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வு உடன் இருக்க என்பதால், தொலைக்காட்சி, ரேடியோ மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், செய்தி விளம்பரம் துறை, சுகாதாரத்துறை, காவல் துறை மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும், தற்போது கொரோனா பாதிப்பு உச்சகட்டத்தில் உள்ளது என்றும், இது சம்மந்தமாக மத்திய அரசிடம் என்ன தகவல் வரும் என்றும்,தமிழக அரசு என்ன முடிவு எடுக்க உள்ளது என்றும் இது வரை தெரிய வில்லை. மேலும் காவல் துறையானது, இந்த கொரோனா நேரத்தில், பொது மக்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது சில கசப்பான முறையில் நடந்து உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. அவர்களிடம் இந்த நேரத்தில், இருசக்கர வாகனத்தின் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் வழக்குகள் பதிவு செய்து உள்ளனர். இந்த சமயத்தில் அவர்களிடம் சமூக இடைவேளி யுடன் இருக்க வேண்டும், முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று மட்டும் தான் கூற வேண்டும். இது சம்மந்தமாக என்னிடம் சட்டமன்ற உறுப்பினர்கள் புகார்கள் கொடுத்து உள்ளார்கள். எனவே காவல் துறை மக்களுக்கு நண்பனாக இருக்க வேண்டுமே தவிர விரோதியாக இருக்க கூடாது. காவல் துறை மக்களுக்கு தொல்லை கொடுக்க கூடாது. தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளில், தமிழக அரசு ரூ.1000 வழங்கி வருகிறது. ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளில் ரூ.500 காய்கறிகள் மற்றும் மளிகைப்பொருட்கள் முதல்வர் நிவாரண நிதி மூலம் வருவாய் துறை அதிகாரிகள் கொடுத்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் 3 மாத்திரைகள் சாப்பிட்ட வேண்டும் என்பதற்காக, இந்த கொரோனா எதிர்ப்பு சக்தி மாத்திரை கொடுத்து ஆஷா பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் மூலம் அனைத்து பகுதிகளிலும் கொடுத்து வருகிறோம். தற்போது மத்திய அரசு தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி வருகிறது. இது சம்மந்தமாக இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசு க்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறோம். இதனால் மத்திய அரசுக்கு ரூ.18 கோடி அளவில் லாபம் வந்துள்ளது. இந்த சமயத்தில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் மத்திய அரசு உடனடியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும். புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்து வரும் காவல் துறை, சுகாதாரத்துறை, வருவாய் துறை உட்பட அனைவருக்கும் என்னுடைய பாராட்டு க்களை தெரிவித்து கொள்கிறேன் என்று பேட்டி அளித்தார் .
அனைத்து மீனவர்களுக்கும் வரும் 1 ம் தேதிக்குள் நிவாரணம் வழங்க படும் - மீன்வளத்துறை இயக்குநர் தகவல்
Senthil Kumar 2020-06-29 17:54:48
புதுச்சேரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை யானது ஒவ்வொரு மீனவ பயனாளிகளுக்கும் தலா 5500 ரூபாயை வரும் ஜூலை 1-ஆம் தேதிக்குள் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என மீன்வளத் துறை இயக்குனர் முத்துமீனா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் இன்று சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் அவர்கள் பேட்டியின் போது, ......
Senthil Kumar 2020-06-29 17:53:47
புதுச்சேரியில் 42 நபர்களுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ளது . இதில் 417 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 262 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் மாநிலத்தில் இதுவரை உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உள்ளது.
வணிக நிறுவனங்கள் மற்றும் வாகனங்கள் மீது கட்டாய வரி வசூலில் ஈடுபடும் புதுச்சேரி அரசை கண்டித்து திராவிடர் கழகம் உள்ளிட்ட பலர் அமைப்பினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்.
Senthil Kumar 2020-06-29 17:52:23
புதுச்சேரியில் கரோன நெருக்கடியான நேரத்தில் மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய புதுவை அரசு அதற்கு மாறாக வாகனத்தில் போவோர் வருவோர் மற்றும் கடை நடத்தும் வணிகர்களிடம் வளைத்து விரட்டியடித்து கட்டாய வசூலில் ஈடுபட்டு வரும் காவல்துறை மற்றும் ஆடாவடி உள்ளாட்சித் துறை ஊழியர்களை நிர்ப்பந்திக்கும் ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற அடாவடித்தனத்தை கண்டித்து அதனை கைவிட வலியுறுத்தியும் புதுச்சேரி திராவிடர் கழகத்தினர் லோகு அய்யப்பன், மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன், மீனவர் விடுதலை வேங்கைகள் மங்கையர் செல்வன்தமிழ் உள்ளிட்ட அமைப்பினர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் போராட்டத்தின் போது நகராட்சியின் வரி ரசீது மூலம் மாஸ்க் அணியதோர் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் விதிக்கப்படும் கட்டாய வசூலில் ஈடுபடுவதை அரசு கைவிடுவேண்டும் என முழக்கமிட்டனர்.
வாலிபர் தலையில் கல்லை போட்டு கொலை.. அடையாளம் தெரியாததால் பிணத்துடன் 2 மணிநேரம் தவித்த போலீசார்
Senthil Kumar 2020-06-29 17:51:14
புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியில் உள்ள உடையார் தோட்டம் பகுதியில் 35 வயது மதிப்புள்ள வாலிபர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதாக முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.காலை 6 மணிக்கு
புதுவை அரசு வனத்துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் இந்நிலையில் இவ் அலுவலகத்தில் புதிதாக பதவியேற்ற இருக்கும் இருக்கும்...
Senthil Kumar 2020-06-27 20:41:09
புதுவை அரசு வனத்துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் இந்நிலையில் இவ் அலுவலகத்தில் புதிதாக பதவியேற்ற இருக்கும் இருக்கும் துணை வனக்காப்பாளர் அவர்கள் ஊழியர்களை மிரட்டுவதாகவும் எந்த ஒரு செயலுக்கும் ஊழியர்களின் பேச்சை கேட்காமல் மிரட்டி அவர்களுக்கு மெமோ வழங்கப்படும் எனவும் ஊழியர்களை துணை வனக்காப்பாளர் தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் என்று அலுவலகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஊழியர்களை ஈடுபடுத்தப்பட்டுள்ளது அப்போது ஊழியர்கள் தங்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை கையுறை ஆகியவற்றை வழங்குமாறு துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர் இதனை கேட்ட துணை வனக்காப்பாளர் ஊழியர்களை மிரட்டல் போக்கோடு நடத்தியதாக கூறி இதனை கண்டித்து 50க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் ஊழியர் சங்கத் தலைவர் லாரன்ஸ் தலைமையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் .
புதுச்சேரியில் இன்று முதல்வர் நாராயணசாமி அவர்கள் பேட்டி அளித்தார்...
Senthil Kumar 2020-06-27 20:39:06
புதுச்சேரியில் இன்று முதல்வர் நாராயணசாமி அவர்கள் பேட்டியின் போது நேற்று 517 பேருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்து உள்ள நிலையில், இன்று 87 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், இதுவரை புதுச்சேரி யில் மொத்தம் 619 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 221பேர் குணமடைந்து வீட்டு க்கு சென்ற நிலையில், தற்போது கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனை,ஜிப்மர் மருத்துவமனை,காரைக்கால் ஆகிய இடங்களில் மொத்தம் 388 பேர் கொரோனா தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர் என்றும், தற்போது கூனிச்சப்பட்டு பகுதியில் முகக்கவசம் தயாரிக்கும் கம்பெனியின் மூலம் ஒரு நபருக்கு ஏற்பட்டுள்ள கொரோனா, இப்போது ஒரே இடத்தில் 150 பேருக்கு பரவியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் சென்னையில் இருந்து வந்தவர்கள், தமிழக பகுதியான கடலூர் மற்றும் விழுப்புரம் பகுதிகளில் இருந்து வரும் நபர்கள் மூலம் அதிகமாக பரவியுள்ளது என்பதால், எனவே பொது மக்கள் அக்கம்பக்கத்தில் யாராவது வெளிமாநிலத்தில் இருந்து புதுச்சேரிக்கு வந்தால், காவல் துறை மற்றும் வருவாய் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போது தான் அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்வோம். இது சம்மந்தமாக மக்கள் மூலம் எந்தவித தகவலும் வருவதில்லை. அதனால் தான் தற்போது புதுச்சேரி மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. இன்று நெல்லித்தோப்பு பகுதியில் 3 இடங்கள், காமராஜ் நகர் தொகுதி உட்பட்ட தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளில் ,மருத்துவர்கள், செவிலியர்கள் ஆஷா பணியாளர்கள் நேரடியாக சென்று பரிசோதனை செய்து வருகிறார்கள். மேலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளில், முதல்வர் நிவாரண நிதி மூலம் காய்கறிகள் மற்றும் மளிகைப்பொருட்கள் கொடுக்க ஏற்பாடுகள் செய்து வருவதாகவும், நேற்று எனது அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் நபருக்கு கொரோனா தொற்று நோய் வந்து உள்ளதாகவும், அங்கு கிருமிநாசினி மருந்து கள் தெளித்து வருகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முதல்வர் அலுவலகம் மூடப்படும் என்றும், நேற்று எனது தலைமையில் பேரிடர் துறை அதிகாரிகள் மற்றும் தலைமைச் செயலாளர் உட்பட அதிகாரிகள் இடையே கொரோனா வைரஸ் தடுப்பது பற்றி ஆலோசனை கூட்டம் நடத்தி, அதில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மூலம் ஒவ்வொரு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதா என்றும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், அங்கு பணிபுரிந்து வரும் நபர்கள் அனைவரும் முகக்கவசத்துடன் இருக்கிறார்களா என்று சோதனை செய்ய வேண்டும் என்று இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அகில இந்திய அளவில் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இறப்பு 15 ஆயிரம் தாண்டி உள்ளது, இதே போல் தமிழகத்தில் 75 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இறப்பு 1000 தாண்டி உள்ளது. தற்போது கடலூரில் 1000 மற்றும் விழுப்புரம் 600 தாண்டி உள்ளது. எனவே புதுச்சேரி மாநிலத்தில் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனை,ஜிப்மர் மருத்துவமனை ஆகிய இடங்களில் கொரோனா நோயாளிகள் அதிகரிக்கும் வகையில் தற்போது தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும், தற்போது கிராமபுற பகுதிகளில் உள்ள வில்லியனூர், பாகூர் மருத்துவமனையில் 3 ஷிப்டு முறையில் வேலை பார்க்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், தனியார் மருத்துவ மனையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும், இதன் மூலம் 24 மணி நேரமும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முடியும் என்றும், மேலும் கொரோனா அறிகுறி இல்லாதவர்களை கண்காணிக்க வேண்டும் என்றும், தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்க முதல்வர் நிவாரண நிதி மூலம் ஏற்பாடு செய்து வருவதாகவும், தற்போது 200 மருத்துவர்கள், 60 செவிலியர்கள் நியமனங்கள் செய்யவும், மருந்துகள் தேவையான அளவிற்கு உள்ளதா என்று அவ்வப்போது ஏற்பாடுகள் செய்து வருவதாகவும், தற்போது மக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பற்றி பயம் வந்து உள்ளது. அனைவரும் முகக்கவசத்துடன் வெளியே வருகிறார்கள். தற்போது சமூக இடைவேளியுடன் இருந்து வருகிறார்கள்.தற்போது கொரோனா நேரத்தில் பொது மக்கள் இடையே அதிகாரிகள் அதிரடியாக கட்டணம் வசூல் செய்து வருவதாகவும், இந்த கொரோனா நேரத்தில் நடக்க கூடாது என்று நான் தெளிவாக கூறி உள்ளேன். நேற்று மீனவர்கள் கடலில் கறுப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் .இதற்கு முக்கிய காரணம் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அவர்கள் தான், மீனவர்களுக்கு நிவாரண தொகையை வழங்க உடனடியாக ஒப்புதல் அளிக்காமல், இந்த கொரோனா நேரத்தில் காலம் தாழ்த்தி, பல கேள்விகள் கேட்டு அதில் யார் பென்ஷன் வாங்குகிறார்கள் என்று கூறி காலம் தாழ்த்தி வருகிறார். மேலும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அவர்கள், எங்கள் அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்தும் வகையில், அவர் மீது நீதிமன்ற மூலம் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், இதில் அதிகாரிகள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அவர்களோடு துணைக்கு போனால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்போம். நேற்று மீனவர்கள் கடலில் கறுப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் என்றும், இதன் மூலம் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ் அவர்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மக்களுக்கு வஞ்சகம் செய்து வரும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அவர்கள் மீது நடவடிக்கை உள்ளோம். தற்போது 2020- 2021 ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் சம்மந்தமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராம் அவர்கள் மூலம் தகவல் தெரிவித்துள்ளோம். இந்த பட்ஜெட் ஒப்புதல் மத்திய அரசு அறிவித்த பின் தான் தாக்கல் செய்ய முடியும், தற்போது மத்திய அரசிடம் இருந்து பட்ஜெட் தாக்கல் சம்மந்தமாக கால தாமதம் ஆகிறது. இது சம்மந்தமாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி உள்ளேன். தற்போது சாத்தான்குளம் சம்பவம் காவல் துறையினர், மனித உயிர்களை பாதுகாக்க வேண்டுமே தவிர அவர்களே உயிரை எடுக்க கூடாது. எனவே தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,காவல் துறையின் அதிகாரத்திற்கு, தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சம்மந்தமாக எங்கள் மாநிலத்தில் நடந்தால், கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்றும்,எனவே புதுச்சேரி மக்கள் பொது நிகழ்ச்சிகள் மற்றும் சடங்குகளில் கூட்டம் தவிர்க்க பட வேண்டும் என்றும், தற்போது இந்த ஊரடங்கு உத்தரவு ஜூலை 2 ஆம் தேதி வரை இருக்கும், மத்திய அரசு ஜூன் 30 ஆம் தேதி எங்களுக்கு என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று கூறுவார்கள் அதன் படி நாங்கள் ஊரடங்கு உத்தரவு பற்றி கூறுவோம். தற்போது மேற்குவங்காளத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு உத்தரவு என அறிவித்து உள்ளனர். தற்போது மக்கள் உயிர், பொருளாதார வளர்ச்சி இரண்டியும் பார்த்து நல்ல முடிவுகள் எடுக்க உள்ளோம். இந்த கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்து வரும் காவல் துறை, வருவாய் துறை சுகாதாரத்துறை உட்பட அனைவருக்கும் என்னுடைய பாராட்டு க்களை தெரிவித்து கொள்கிறேன் என்று பேட்டி அளித்தார்.
புதுச்சேரி 18 மீனவ கிராமம் மீனவர்கள் மீன்பிடி தடை காலம் தொகையை வழங்க கோரி நடுக்கடலில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்.
Senthil Kumar 2020-06-26 12:27:36
புதுச்சேரி : புதுச்சேரியில் 18 மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் நிவாரண தொகையை வழங்க விடாமல் தடுத்து வரும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அவர்களுக்கு எதிராக நடுக்கடலில் மீனவர்கள் கறுப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டம் இன்று நடைபெறும் என்று 18 மீனவ கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து சார்பில் அறிவித்து உள்ளனர். ஆனால் நேற்று தடைக்கால நிவாரணம் தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், இதில் மஞ்சள் கார்டுகள் மற்றும் ஓய்வூதிய பெறும் நபர்களுக்கு நிவாரண தொகை இல்லை என்று மீன் வளத்துறை மூலம் அறிவிப்பு வெளியிட்டார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 18 க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று நடுக்கடலில் கறுப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனால் புதுச்சேரி கடற்கரையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
புதுச்சேரியில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ் அவர்கள் பேட்டியின் போது இன்று புதுச்சேரியில் 27 பேருக்கும்,காரைக்கால் பகுதியில் 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும்,
Senthil Kumar 2020-06-26 11:48:13
புதுச்சேரியில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ் அவர்கள் பேட்டியின் போது இன்று புதுச்சேரியில் 27 பேருக்கும்,காரைக்கால் பகுதியில் 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், நேற்று 590 பேருக்கு பரிசோதனை செய்து உள்ள நிலையில், இன்று 30 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், இதுவரை 14,297 பேருக்கு பரிசோதனை செய்து உள்ள நிலையில், இதில் 14,267 பேருக்கு இல்லை என்றும், இன்று ஒரு நாள் மட்டும் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், தற்போது கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் 210 பேரும், ஜிப்மர் மருத்துவமனை யில் 87 பேரும், புதுச்சேரியை சேர்ந்த வெளிமாநிலத்தில் 2 பேரும், காரைக்கால் பகுதியில் 21 பேரும், மாகே மற்றும் ஏனம் ஆகிய பகுதிகளில் ஒரு நபர் ஆக மொத்தம் 322 பேர் சிகிச்சை பிரிவில் உள்ளனர் என்றும், இன்று கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனை யில் 8 பேரும், ஜிப்மர் மருத்துவமனை யில் 8 பேரும் ஆக மொத்தம் 16 பேர் குணமடைந்து வீட்டு க்கு சென்ற நிலையில், தற்போது இது வரை புதுச்சேரியில் 524 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், இதில் 203 பேர் குணமடைந்து வீட்டு க்கு சென்ற நிலையில், தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் 322 உள்ளனர். ஆகவே பொது மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பேட்டி அளித்தார்.
புதுச்சேரியில் இன்று முதல்வர் நாராயணசாமி அவர்கள் பேட்டி அளித்தார்.......
Senthil Kumar 2020-06-25 19:38:54
புதுச்சேரியில் இன்று முதல்வர் நாராயணசாமி அவர்கள் பேட்டியின் போது, புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனையில் 448 பேருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்து உள்ளோம். கடந்த ஞாயிற்றுக்கிழமை எங்கள் அமைச்சரவை மற்றும் பேரிடர் துறை அதிகாரிகள் மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனை யில் அதிக அளவில் உமிழ்நீர் பரிசோதனை செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இதில் தினமும் 220 பேருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்து வந்த நிலையில், தற்போது இன்று 448 பேருக்கு பரிசோதனை செய்து வருகிறோம் என்றும்,இது படிப்படியாக உயர்த்தி தினமும் 1000 பேருக்கு பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க உள்ளோம். இந்த 448 பேரில் புதுச்சேரியில் 32 பேருக்கும்,காரைக்கால் பகுதியில் 7 பேருக்கும் வந்துள்ளது. தற்போது கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் 278 பேர் சிகிச்சை பிரிவில் உள்ளனர் என்றும், அவர்களுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்க வில்லை என்று புகார்கள் வந்து உள்ளது என்றும், மேலும் கொரோனா நோயாளிகளுக்கு உணவு தரமில்லாத நிலையில் உள்ளது என்று புகார்கள் வந்து உள்ளது. இது சம்மந்தமாக இன்று மருத்துவ இயக்குனரிடம் சிகிச்சை முறை மற்றும் உணவுகள் தரமாக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். மேலும் இந்த நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவமனை இயக்குனர் சேர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்றும், மேலும் இந்த கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தும் வகையில் செயற்குழு கூட்டத்தில் யார் யாருக்கு என்ன பணிகள் செய்ய வேண்டும் என்றும்,ஒவ்வொரு கிராமங்களில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மூலம் கணக்கெடுப்பு எடுத்தும், வருவாய் துறை, உள்ளாட்சி துறை மூலம் என்ன வேலை செய்து வருகின்றனர் என்று ஆய்வு மேற்கொள்ளப்படும். தற்போது கூனிச்சப்பட்டு பகுதியில் முகக்கவசம் தயாரிக்கும் கம்பெனியின் மூலம் அங்கு பணிபுரிந்து வரும் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் அந்த பகுதி முழுவதும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த முகக்கவசம் தயாரிக்கும் உரிமையாளரின் மெத்தனப்போக்கின் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் அதிக அளவில் பரவி உள்ளது. இந்த கம்பெனி அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது சம்மந்தமாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மூலம் உத்தரவு விட்டு உள்ளேன். தற்போது மத்திய சுகாதாரத்துறை புதிய முறையில், மூக்கின் வழியே பரிசோதனை செய்யும் நிலையில், கொரோனா பாதிப்பு 25 நிமிடங்களில் தெரிந்து விடும், ஆனால் உமிழ்நீர் பரிசோதனை செய்து 36 மணி நேரம் கழித்து தான் கொரோனா பாதிப்பு தெரிய வரும், இதனால் கொரோனா வைரஸ் உள்ளவர்களால் அதிக அளவில் பரவ வாய்ப்பு இருக்கிறது. தற்போது இந்த மூக்கின் வழியே பரிசோதனை 30 நிமிடங்களில் தெரிந்து விடும் என்பதால், கொரோனா பாதிப்பு குறைந்து விடும், இதனால் ஒரே நாளில் 1000 பேருக்கு தினந்தோறும் உடனடியாக பரிசோதனை செய்ய முடியும். தற்போது உமிழ்நீர் பரிசோதனை ஒரு நபருக்கு ரூ.4500 செலவுகள் ஆகிறது. இந்த ஆண்டீஜன் மூலம் பரிசோதனை ஒரு நபருக்கு ரூ.450 செலவுகள் ஆகிறது. இதற்கு மத்திய மருத்துவக்கழகம் ஐசிஎம்ஆர் ஒப்புதல் அளித்து உள்ளது. இது சம்மந்தமாக இன்று மருத்துவ அதிகாரிகளிடம் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ் அவர்கள் கூறி உள்ளார். மேலும் தற்போது உமிழ்நீர் பரிசோதனை நகரப்பகுதியை போல், கிராம பகுதிகளில் நடமாடும் மருத்துவமனை மூலம் மருத்துவக்குழுவினர் அங்கு சந்தேகம் உள்ள நபர்களில் யாருக்கு சளி,இருமல், காய்ச்சல் இருக்கிறதா என்று பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், தற்போது மத்திய அரசு அதிகப்படியான மக்களுக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இன்று அகில இந்திய அளவில் அதிக படியான 10 லட்சம் பேருக்கு மருத்துவ பரிசோதனை மகராஷ்டிரா மாநிலம்,டெல்லி, மூன்றாவது மாநிலமாக புதுச்சேரி மாநிலம் உள்ளது. தற்போது ஆண்டீஜன் மருத்துவ பரிசோதனை செய்து புதுச்சேரி மாநிலம் 2 வது இடம் வர வாய்ப்பு உள்ளது என்றும், மத்திய அரசு தொடர்ந்து 19 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளது என்றும், தற்போது டெல்லியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரே விலையாக உள்ளது என்றும், டீசல் விலை கடந்த 19 நாட்களில் ரூ.11 உயர்த்தி உள்ளனர். இதேபோல் பெட்ரோல் விலை ரூ.10 ஆக உயர்த்தி உள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு நேரத்தில் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளது. இது மத்திய அரசு மக்களுக்கு பெரிய சுமையை கொடுத்து உள்ளது. தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. இதனால் ரூ.18 லட்ச ரூபாய் சேமித்து உள்ளனர். இதை மத்திய அரசு மக்களுக்கு கொடுப்பது இல்லை. இதன் மூலம் 19 நாட்களில் மத்திய அரசுக்கு ரூ.50 ஆயிரம் வருவாய் வந்துள்ளது என்றும், ஆகவே மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை நிறுத்த வேண்டும் என்றும், தற்போது கச்சா எண்ணெய் சப்ளை 26 டாலர்கள் உள்ளது .இதனால் மக்கள், விவசாயிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு குடிமைப் பொருள் வழங்கல் துறை ஏப்ரல், மே,ஜூன் மாதங்கள் இலவச அரிசி ஒருவருக்கு 5 கிலோ வழங்கினார்கள். தற்போது வேலை வாய்ப்பு குறைவாக உள்ளதால், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் வரை இலவச அரிசி வழங்க வேண்டும் என்றும், இதன் மூலம் மக்கள் பட்டினிச்சாவு இல்லாமல் உருவாக்க முடியும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன். தற்போது தமிழகத்தை ஒப்பிடும் போது புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்து வரும் நிலையில் மதியம் 2 மணி வரை அனைத்து கடைகள் மூடப்பட்டு உள்ளது. தற்போது மக்கள் திருமணம், கோவில், சடங்குகள் போன்ற இடங்களில் மக்கள் கூட்டம் கூட வேண்டாம். தற்போது தேநீர் கடைகளில் மக்கள் அதிக அளவில் இருப்பதாக தகவல் வந்து உள்ளது. தற்போது இறப்பு 9 ஆக உள்ளது, பாதிப்பு 278 ஆக உள்ளது. கடலூர் மற்றும் விழுப்புரம் பகுதிகளில் 600 தாண்டி உள்ளது. இதேபோல் சென்னையில் தினமும் 2000 பேருக்கு மேல் பரவி வருகிறது. இதனால் புதுச்சேரி மக்கள் தங்களது பகுதிகளில் யார் வெளி மாநிலங்களிலிருந்து வந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்து வரும் காவல் துறை, வருவாய் துறை, சுகாதாரத்துறை, மின் துறை உட்பட அனைவருக்கும் என்னுடைய பாராட்டு க்களை தெரிவித்து கொள்கிறேன் என்று பேட்டி அளித்தார்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரத்தை உடனடியாக வழங்ககோரி ஆளுநர் மாளிகை முன்பு கருப்பு கொடி ஏந்தி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Senthil Kumar 2020-06-25 19:38:26
புதுச்சேரி மாநிலத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்த பின்னர் கடந்த 1ஆம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதனிடையே மீனவர்களுக்கு கடலுக்கு சென்ற நிலையில் இதுவரை தடைக்கால நிவாரணம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை உடனடியாக வழங்கக்கோரி ஆளுநர் மாளிகை முன்பு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் கையில் கருப்பு கொடி ஏந்தி தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம் காவல்துறை கண்காணிப்பாளர் மாறன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஆளுநரை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி சுதேசி மில் அருகில் இன்று 50 க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், கட்சியின் முதன்மை செயலாளர் தேவ பொழிலன் அவர்கள் தலைமையில் ,பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
Senthil Kumar 2020-06-25 19:37:53
புதுச்சேரி சுதேசி மில் அருகில் இன்று 50 க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், கட்சியின் முதன்மை செயலாளர் தேவ பொழிலன் அவர்கள் தலைமையில் ,பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பின்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் தேவ பொழிலன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் மத்திய அரசு இந்த கொரோனா நேரத்திலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளது என்றும், தற்போது கச்சா எண்ணெய் குறைந்து உள்ள நேரத்தில், மத்திய அரசு, ஏழை எளிய மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், புதுச்சேரியில் தற்போது கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால், மத்திய அரசு உடனடியாக மாநில அரசுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்க என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டு கொள்கிறோம் என்று பேட்டி அளித்தார். இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் செந்தில்குமார், ஜான்சன், அலெக்ஸ், ஏகாம்பரம் உட்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Top Stories

Home | Privacy Policy | Terms & Condition | Why RNI?