முரளிதரராவ், பாஜக தேசியப் பொதுச்செயலாளர்.

Senthil Kumar 2019-02-12 22:17:39    VIDEO 2637
முரளிதரராவ், பாஜக தேசியப் பொதுச்செயலாளர்.
புதுச்சேரி : தமிழகத்தில் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. கூட்டணி குறித்து இன்னும் ஒரு சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மீன்வளத் துறைக்கு தனி அமைச்சகம் மத்திய அரசு அமைத்துள்ள நிலையில், மீனவர்கள் சார்ந்த பிரச்சனைகளையும், அதற்கான தீர்வுகளையும் வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்வது தொடர்பாக பாஜக தேசிய பொது செயலாளர் முரளிதரராவ் புதுச்சேரி மாநில மீனவர்களிடம் கருத்துகளை கேட்டார்.

பூரணாகுப்பம் பகுதியில் உள்ள

தனியார் ஹோட்டலில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்று தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்தனர். கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் சாமிநாதன் மற்றும் பாஜக நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முரளிதரராவ், கடந்த தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பாஜக கூட்டிணி அமைத்து போட்டியிட்டது போல, இந்த தேர்தலிலும் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டுமென பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார். வரும் பாராளுமன்ற தேர்தலில்

தமிழகத்தில் பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது என தெரிவித்த அவர், தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. இன்னும் ஒருசில தினங்களில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வகமாக அறிவிக்கப்படும். தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெரும் என முரளிதரராவ் நம்பிக்கை தெரிவித்தார்.Related News

video